தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. 1.15 கோடிக்கும் அதிகமான மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தப் பணத்தை வங்கி சேமிப்பு திட்டத்தில் செலுத்தினால் கூடுதல் பணம் அதாவது வட்டியுடன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு அரசு பிரத்யேக திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4 சதவிகிதம் மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 7.5 சதவிகிதம் வரை வட்டி பெறலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு இதற்காக மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க வேண்டும். நீலகிரியில் தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“