குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு ரூ.1,000 தொகையை வரவு வைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மாதம் ரூ. 1,000 வராதவர்களுக்கு மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பம் மீது வருவாய்த் துறை அலுவலகர்கள் ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு மேல்முறையீடு செய்த தகுதியான பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், ரூ. 1,000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு உரிமைத் தொகை வரவு வைக்கும் 2-ம் கட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 09) தொடங்கி வைக்கிறார்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டுகளை வழங்கி தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்னதாக, பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் அவர்களின் வங்கி கணக்குகளில் 1 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு நாளை ரூ. 1,000 வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“