Tamilnadu-bjp | annamalai தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் அன்று (செம்படம்பர் 15ம் தேதி) குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகைக்கு பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, பிறகு தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
இந்த நிலையில், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக் கோரி விழுப்புரத்தில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“