கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. பொருளாதார சூழல் உள்பட தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
பொருளாதார தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுவதால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய ரேஷன் அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், வாட்ஸ்அப்-ல் செய்தி ஒன்று காட்டுத் தீ போல் பரவியது. அதில், திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், புதிய ரேஷன் அட்டைதாரர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறியும் தகவல் பரவியது. இதற்கு ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப பதிவு நடைபெறுவதாக வாட்ஸ்அப்-ல் போலி செய்தி பரவியது.
இதை உண்மையென நம்பி இன்று (ஆக.17) திருச்சி, விருதுநகர், விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் மக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் ரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அரசுத் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“