விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் பகுதியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சிறப்பு முகாமை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
இந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது ஒரு பெண் தக்காளி விலை இவ்வளவு ஏறி உள்ளதே ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் சற்று கோபமடைந்த அமைச்சர் பொன்முடி, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்களே இது மகிழ்ச்சியா? இல்லையா? நீங்களே சொல்லுங்கள்.” என்று கேட்டார். அதற்கு பெண்கள் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “தக்காளி விலை ஏறும் இறங்கும்… அதை மத்தியில இருக்கிற மோடிகிட்ட போய் கேளு” என்று பதில் அளித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"