scorecardresearch

கோவையில் பிடிபட்ட மக்னா யானை: எங்கு விடுவது என தெரியாமல் வனத்துறை திணறல்

தகவல் அறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் லாரியை சிறைப்பிடித்து யானையை திருப்பி எடுத்து செல்ல வலியுறுத்தினர்.

Coimbatore
Magna elephant

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முள்ளி பகுதிக்கு கொண்டு வரப்பட்ட மக்னா யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானை காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு, லாரி மூலம் யானையை காரமடை வெள்ளியங்காடு சாலையில் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் லாரியை சிறைப்பிடித்து யானையை திருப்பி எடுத்து செல்ல வலியுறுத்தினர்.

யானையை இங்கு விட்டால் மீண்டும் ஊருக்குள் புகும், எனவே இந்த யானையை இங்கு விடக்கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி யானை,  போலீஸ் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கோண்டு செல்லபட்டது.

தற்போது யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தபட்டது. யானை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை அரசு மரக்கிடங்கில் லாரியுடன் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

யானையை எங்கு கொண்டு சென்று விடுவது என்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன், வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதுவரை முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Magna elephant caught in coimbatore