வேலூர் அருகே நில அதிர்வு; பொதுமக்கள் அச்சம்

இன்று காலை வேலூரில் இருந்து மேற்கு – தென்மேற்கு திசையில் 59 கி.மீ தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

earthquake, vellore, today news, breaking

Magnitude 3.6 earthquake hits vellore : தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை மிகப்பெரிய இயற்கை அச்சுறுத்தலாக மாறி வருகின்ற நிலையில் இன்று காலை வேலூரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 04.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நில அதிர்வால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருவதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.

இன்று காலை வேலூரில் இருந்து மேற்கு – தென்மேற்கு திசையில் 59 கி.மீ தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிரிழப்பு அல்லது கட்டிட சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை என்பது பொதுமக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Magnitude 3 6 earthquake hits vellore this morning

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com