/indian-express-tamil/media/media_files/2025/05/07/oeECiIAzNLpBpKuNQvQr.jpg)
திருச்சி ஸ்ரீ சீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகமவிழா!
திருச்சி பொன்மலை நார்த்" டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் சீதாதேவி மகா மாரியம்மன், ஸ்ரீகற்பக விநாயகர், சதுர்முக வாராகி அம்மன், சதுர்முக கால பைரவர், ஸ்ரீஆனந்த சாய்பாபா கோயிலில் உலக நன்மைக்காக மஹா சண்டியாகம் விழா இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி நேற்று (6-ந் தேதி) மங்கள வாத்தியம், மஹா கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம், லெட்சுமி ஹோமம் , மங்கள வாத்தியம், விக்னேஷ்வர பூஜை, புண்ணியானவனம். முதல் கால வேதிகார்ச்சனை தேவிமஹாத்மியபாராயணம்,
மஹாதீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று மங்கள வாத்தியம் முழங்க, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவானம், இரண்டாம் கால வேதிகார்ச்சனை 9 மணி முதல் தேவிமஹாத்மிய 13 அத்யாய மஹாசண்டி ஹோமம் மஹாபூர்ணாஹூதி, அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ரவிச்சந்திரன்,செயலாளர் மதியழகன், பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் ரங்கநாதன், துணைச் செயலாளர் முத்துக்குமார், கமிட்டி உறுப்பினர்கள் , கோபிநாத் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.