தமிழகத்திலையே உற்பத்தியாகி தமிழகத்திலையே கடலில் கலக்கக்கூடிய தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.அது தான் மகா புஷ்கரம்
இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் 2 கோடி பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் நீராட இருக்கிறார்கள். இத்தனை பக்தர்களும் நீராடும் வகையில் ஆங்காங்கே பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாகவும் ஊர்மக்கள் சார்பாகவும்,
கோவில் விழா கமிட்டியினர் சார்பாகவும் தாமிரபரணி நதிக்கரை முழுவதும் ஏற்கனவே இருந்த படித்துறைகளை சீரமைத்தும்,புதிதாக பல இடங்களில் படித்துறைகளை உருவாக்கியும் வருகிறார்கள்.
தற்போது நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி,தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட படித்துறைகளில் பக்தர்கள் புண்ணிய நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது..
/tamil-ie/media/media_files/uploads/2018/10/2-17-1024x680.jpg)
புராணம் சொல்லும் வரலாறு:
அருவங்குளம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த இடம் என அழைக்கப்படுகிறது.ஏற்கனவே இவ்விடம் ஜடாயு தீர்த்தம் என புகழ் பெற்றது. இவ்விடம் திருநெல்வேலி அருகில் திருநெல்வேலி அவுட்டர் பைபாஸ் ரோட்டில் நாரணம்மாள்புரம் அருகில் உள்ளது...
சீவலப்பேரி இந்த ஊரில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணைவதால் முக்கூடல் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இங்கே புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவிலும்
சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவிலும் ஆற்றுக்கு அருகிலையே அமைந்துள்ளது. இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..
முறப்பநாடு இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது..
மேலும் இக்கோவில் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.இங்கே கைலாசநாதர் குருவின் அம்சமாகவே காட்சி தருகிறார்..இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்..
எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராட வரவேண்டும் என்ற விபரத்தையும் காணுங்கள்..
அக்-12 விருச்சிகம்
அக்-13 தனுசு
அக்-14 மகரம்
அக்--15 கும்பம்
அக்-16 மீனம்
அக்-17 மேஷம்
அக்-18 ரிஷபம்
அக்-19 மிதுனம்
அக்-20 கடகம்
அக்-21 சிம்மம்
அக்-22 கன்னி
அக்-23 துலாம்