Advertisment

மகா சிவராத்திரி : ’யோகாவை அரசியல் மத ரீதியான பார்வையில் பார்க்கக் கூடாது’ - வெங்கய்யா நாயுடு

யோகா என்பது கலை, அறிவியல், அமைதி, செல்வம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Venkaiah naidu

Maha Shivratri 2020 Isha Yoga Center invites deputy president Venkaiah Naidu : ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும். இந்த வருடம், நடைபெற்ற இந்நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்துக் கொண்டார்.

Advertisment

சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

சிவராத்திரியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, மஹா சிவ ராத்திரியானது, மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல ஆற்றலை வெளிக்கொண்டு வர சந்தர்ப்பம் தருகிறது என்று தெரிவித்தார். இது போன்ற விழாக்கள், இளைஞர்கள் மத்தியில் நமது கலாசாரத்தை கொண்டு செல்ல வாய்ப்பாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். யோகா என்பது கலை, அறிவியல், அமைதி, செல்வம் என்றும் அவர் தெரிவித்தார். யோகாவை அரசியல், மத ரீதியான பார்வையில் பார்க்கக்கூடாது என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார். சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தில், விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் களை கட்டின.

மேலும் படிக்க : அனைவருக்கும் மஹா சிவராத்திரி நல்வாழ்த்துகள்…

 

Coimbatore Deputy President Venkaiah Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment