மகா சிவராத்திரியை முன்னிட்டு, மதுரையில் இருந்து சென்னை வழியாக, நவஜோதிர்லிங்க தரிசனத்திற்காக, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
ஜோதிர்லிங்க வழிபாடு என்பது சிவபெருமானை வழிபடும் விதங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவ ஜோதிர்லிங்க மஹா யாத்திரை சிறப்பு ரயில், வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக இயக்கப்படுகிறது.
12 நாட்கள் சிறப்பு யாத்திரையில் மல்லிகார்ஜுனர், பார்லி வைத்தியநாத், அவுண்டா நாகநாத், கிருஷ்ணேஸ்வர், பீமாசங்கர், த்ரியம்பகேஸ்வர், சோம்நாத், மஹாகாளேஸ்வர், ஓம்காரேஸ்வரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் ஒருவருக்கு, 3 ஆம் வகுப்பு 'ஏ.சி' பெட்டியில், 35,500 ரூபாய் கட்டணம்; 'ஏ.சி' இல்லாத பெட்டியில், 25,700 ரூபாய் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல் பெற, 73058 58585 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“