Advertisment

மகாவிஷ்ணு ஆன்மிக சொற்பொழிவு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அதிகாரி இடமாற்றம்

Maha Vishnu, Chennai Chief Education Officer transferred- தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக செயலாளர் ஜே.ஏஞ்சலோ இருதயசாமி மறு அறிவிப்பு வரும் வரை பொறுப்பில் இருப்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
TN School education dept 10 working days reduced new revised calendar Tamil News

Chennai Chief Education Officer transferred

தஞ்சாவூர் நூலகத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ் இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக செயலாளர் ஜே.ஏஞ்சலோ இருதயசாமி மறு அறிவிப்பு வரும் வரை பொறுப்பில் இருப்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்ம் 28-ம் தேதி, மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக மகாவிஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வந்தது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையானது தமிழக அரசிடம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மார்ஸ் ஒப்புதலின் பெயரிலேயே இந்த 2 அரசுப் பள்ளிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பள்ளிகளில் இத்தகைய செயல்பாடுகளுக்கு அனுமதி பெறுவது உறுதிப்படுத்தப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன.

அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தற்போது சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் மீது பணியிட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தஞ்சை சரபோஜி மன்னர் நூலகத்தின் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல், சென்னை மாவட்டத்துக் புதிய முதன்மைக் கல்வி அதிகாரியாக இதற்குமுன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய ஏஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

School Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment