Advertisment

மகாபலிபுரம்; சென்னையின் 6-வது புதிய செயற்கைக் கோள் நகரம்: வீட்டுவசதி துறை அறிவிப்பு

25 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி சென்னைக்கு அருகே ஆறாவது புதிய செயற்கைக் கோள் நகரமாக மகாபலிபுரம் உருவாக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Mahabalipuram’s China connection - 1300 years History

சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக  (செயற்கைக் கோள் நகரம்) உருவாக்கப்படும் மகாபலிபுரம், கலை, வரலாறு மற்றும் சுற்றுலா தலமாக உள்ள 25 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி  உருவாக்கப்படும் என மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. 

Advertisment

கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மகாபலிபுரம் அருகே செயற்கைக் கோள் நகரம் உருவாக்கப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனவரியில் தனது சட்டப்பேரவை உரையின் போது அறிவித்தார். 

அரசின் அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, குன்னப்பட்டு, பஞ்சந்திருத்தி, தட்சிணாவர்த்தி, ஏமூர், பொருந்தவாக்கம், கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, கடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பேற்றல் ஆகிய கிராமங்கள் செயற்கைக் கோள் நகரத்தை உள்ளிடக்கியதாக உருவாக்கப்படுகிறது. 

அந்தப் பகுதிகளில் வசிப்பவர்களோ அல்லது ஏதேனும் உள்ளாட்சி அமைப்புகளோ அல்லது நிறுவனங்களோ, அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்திடம் முன்மொழிவு குறித்த ஆட்சேபனைகள்/ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகள், எழுத்துப்பூர்வமாக, அரசின் முதன்மைச் செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பபட வேண்டும். 

பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த, பழங்கால கட்டிடக்கலையை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த புதிய நகரத்தை மேம்படுத்த துறை முடிவு செய்துள்ளது. முன்மொழிவின் ஒரு பகுதியாக, மகாபலிபுரத்திற்கு புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மகாபலிபுரம் தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய நகரங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல்பட்டு புதிய நகரம் 60 வருவாய் கிராமங்களையும், காஞ்சிபுரம் புதிய நகரம் 17 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கும்.

திருவள்ளூர் மற்றும் திருமழிசை புதிய நகரங்கள் முறையே 11 மற்றும் 17 வருவாய் கிராமங்களை உள்ளடக்கும். மீஞ்சூர் புதிய நகரத்தின் ஒரு பகுதியாக 12 வருவாய் கிராமங்கள் அமையும். புதிய நகர மேம்பாட்டு விதிகளின்படி, புதிய நகரத் திட்டங்கள் போக்குவரத்து சார்ந்த மேம்பாடு, சுற்றுலா மற்றும் நீர்முனை மேம்பாடு, நீர்வள பெருக்கத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பாரம்பரிய பாதுகாப்புத் திட்டம் மற்றும் நகர்ப்புற சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றைக் குறிக்கும்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment