Advertisment

"எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது" - 'மகாநதி' பட புகழ் ஷோபனா வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahanadhi fame shobana filed case in chennai high court - 'எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது' - 'மகாநதி' பட புகழ் ஷோபனா வழக்கு

mahanadhi fame shobana filed case in chennai high court - 'எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது' - 'மகாநதி' பட புகழ் ஷோபனா வழக்கு

கந்த சஷ்டி கவசம் மற்றும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆல்பங்களை யூ டியூப் உள்ளிட்ட இணைதளங்களில் வெளியிட தடை கோரி மகாநதி ஷோபனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

நடிகர் கமல்ஹாசன் நடித்த மகாநதி திரைபடத்தின் மூலம் பிரபலமான மகாநதி ஷோபனாவிடம் கந்த சஷ்டி கவசம் மற்றும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டர் ஸ்டார் ஆல்பங்களை பாட கடந்த 1996-ம் ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிம்பொனி ரிக்கார்டிங் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்ததின் படி, மகாநதி ஷோபனா 39 பாடல்களை பாடி அதற்கு பதிப்புரிமை பெற்றார்.

இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த பாடல்களை யூ டியூப் மற்றும் இதர இணையதளங்களில் வெளியிடுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தனக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மகாநதி ஷோபனா சென்னை உயர்நீதிமன்றல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

யூ டியூப்-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பாடல்களில் தன்னுடைய திருடப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்த ஆல்பங்களால் அந்த நிறுவனம் ஈட்டிய லாப கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், விசாரணையை டிசம்பர் 20-ம் தேதி தள்ளிவைத்துள்ளார்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment