/indian-express-tamil/media/media_files/2025/06/05/R29EZWugyqN6jMXRDqHn.jpg)
பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும். காலம் கடந்து அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை கொண்டாடுகின்றபோது கட்டுப்பாடு இல்லாமல் போனதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை நாம் இழந்து இருக்கின்றோம்.
அனைத்து இடத்திலும் பொறுமை காப்பது அவசியம் என்பதை இந்த துயர நிகழ்வு நமக்கு உணர்த்தி இருக்கிறது. அரசு ஒரு துயர சம்பவம் நடந்த பிறகு எதிர்காலத்தில் இது போன்று ஒரு துயரம் நடக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து தான் ஆக வேண்டும். அணி நிர்வாகம் தான் பாதுகாப்பு குறித்து கேட்டிருக்க வேண்டும். கமல்ஹாசன் பொது வாழ்க்கையில் இருக்கின்றவர். அவர் அரசியலுக்கு மட்டும் ஒரு பகுதி பொது வாழ்க்கை அல்ல, திரைப்படங்களில் நடிக்கும்போது கூட பொதுமனிதராகத்தான் இருக்கிறார்.அவர் பேசுகின்றபோது கவனத்துடன் பேச வேண்டும்.
சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் தமிழகம் கொந்தளிக்காதா? தேவையற்றதை பேசுவதை பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்துகின்ற உரிமை பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிடையாது. கமலஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும் என கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே காவிரி நீர் பிரச்சனை இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருந்து வருகின்றபோது தேவையற்ற கொந்தளிப்புகள் இருக்கிறது, அந்த கொந்தளிப்பு தணிந்திருக்க கூடிய நேரத்தில் இன்னொரு கொந்தளிப்பை இது உருவாக்கி இருக்கிறது. இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். தமிழகத்தில் எந்த ஷா வந்தாலும் காலூன்ற முடியாது என்று முதல்வர் அரசியலை பேசியிருக்கிறார். அதற்குரிய பதிலை அரசியல்வாதியாக இருப்பவர்களிடம் தான் கேட்க வேண்டும், கவர்னர் இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும்? ஆனால் ஜனநாயகம் என்பது அனைவருக்கும் வாய்ப்புகளை மாற்றி மாற்றி தருவது என்று நான் கருதுகிறேன்.
அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை. ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய மொழிகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் தாய் மொழிக்கும் அவர் அவர்கள் மதிப்பளிக்கிறார்கள். அதே சமயத்தில் மற்றவர்களின் தாய் மொழியை பழிக்கும் உரிமை கிடையாது. முதலமைச்சர் 10 ஆண்டு காலத்திற்கும் மேல் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். அப்பொழுதெல்லாம் தமிழுக்கு என்ன செய்திருக்கிறார்
இப்போது தமிழுக்கு எதிராக யார் எதனை செய்திருக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் கல்வி தரம் உயர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதிகமான கல்வி நிலையங்கள் இருக்கின்ற நேரத்தில் கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது இதனால் கல்வியின் தரம் உயர வேண்டும். இனிமேல் ஐஏஎஸ் தேர்வுகளை கண்டு பயப்படக்கூடியவர்களாக தமிழர்கள் இருக்கக் கூடாது. எந்த தேர்வையும் எதிர்கொள்கின்ற அளவிற்கு கல்வியின் தரம் உயர வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வுகள் தமிழர்களுடைய எதிர்காலத்திற்கும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் தமிழகத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கும் உதவும். யுபிஎஸ்சி தேர்வுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தேர்வுகளை கண்டு பயப்படுகின்ற மாணவர்களை நாம் உருவாக்க கூடாது தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும் அதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.