/tamil-ie/media/media_files/uploads/2023/02/New-Project16.jpg)
அம்மனுக்கு நவராத்திரி போல சிவபெருமானுக்கு மஹாசிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் 4 கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு சக்கர தீர்த்த காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்தார். நாட்டியம் ஆடிய மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/WhatsApp-Image-2023-02-19-at-10.09.07-AM.jpeg)
பின்னர் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு குநாதீஸ்வரர் திருக்கோவில் நடைபெற்ற மஹாசிவராத்திரி பூஜையிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் முருகேசன், கன்னியாகுமரி நகர தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.