scorecardresearch

ரயில் சேவை அட்டவணையில் மாற்றம்: சென்னை- காட்பாடி ரயில்கள் வரும் நேரம் என்ன?

சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு சென்ட்ரல் வரை பயணிக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ஜனவரி 11-ம் தேதி மதியம் 1.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

ரயில் சேவை அட்டவணையில் மாற்றம்: சென்னை- காட்பாடி ரயில்கள் வரும் நேரம் என்ன?

தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் காரணமாக, போக்குவரத்துத் தடைகளை இருப்பதால் ஜனவரி மாதத்திற்கான சென்னை-காட்பாடி ரயில் சேவைகளின் அட்டவணையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காட்பாடி-ஜோலார்பேட்டை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கும், ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும். ஜனவரி 7, 11 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இதேபோல, வேலூர் கன்டோன்மென்ட்-அரக்கோணம் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வேலூரில் இருந்து காலை 10 மணிக்கும், அரக்கோணம்-வேலூர் கண்டோன்மென்ட் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை, ஜனவரி 24ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு சென்ட்ரல் வரை பயணிக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ஜனவரி 11-ம் தேதி மதியம் 1.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

ஜனவரி 11 ஆம் தேதி காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்-சாய்நகர் ஷீரடி அதிவிரைவு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 12.20 மணிக்கு (2 மணி நேரம் தாமதமாக) புறப்படும்.

சென்னை சென்ட்ரல்- மைசூரு சந்திப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 11 ஆம் தேதி மதியம் 1.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Major change in train schedule on chennai katpadi train services