Advertisment

பயணிகள் கவனத்திற்கு... தேஜஸ் எக்ஸ்பிரஸ் திருச்சி வரை மட்டும் இயக்கம்; முக்கிய ரயில்களின் வழித்தடம் மாற்றம்

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை செல்லும் தேஜஸ் ரயில் டிசம்பர் 7 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Major changes in train services due to work in Trichy Dindigul section Madurai to Chennai Tejas Express partially cancelled 2 days stop Trichy Tamil News

திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடைபெறும் என்று வருவதை அடுத்து சில ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை செல்லும் தேஜஸ் ரயில் டிசம்பர் 7 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடைபெறும் என்று வருவதை அடுத்து சில ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisment

இது தொடர்பான முழு விவரம் வருமாறு:

1. செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், வரும் 4, 7, 9, 11ம் தேதிகளில், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மதுரை வழியாக செல்லாது.

2. நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி விரைவு ரயில், 9ம் தேதி விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்.

Advertisment
Advertisement

3. குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், 3, 6, 8, 10ம் தேதிகளில் புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும்.

4. நாகர்கோவில் - கோவை விரைவு ரயில், 4, 7, 9, 11ம் தேதிகளில், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்வதால், மதுரை வழியாக செல்லாது.

5. எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், 7, 11ம் தேதிகளில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.

6. ஓக்ஹா - மதுரை இரவு 10:00 சிறப்பு ரயில், வரும் 6ம் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும்.

7. ஈரோடு - செங்கோட்டை மதியம் 2:00 மணி விரைவு ரயில், இன்றும், 6ம் தேதியும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

8. மதுரை - எழும்பூர் மாலை 3:00 மணி தேஜஸ் ரயில், வரும் 7ம் தேதி திருச்சியில் இருந்து இயக்கப்படும்.

9. செங்கோட்டை - ஈரோடு அதிகாலை 5:00 மணி ரயில் வரும் 7ம் தேதி கரூரில் இருந்து இயக்கப்படும்.

மேற்கண்டவாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்.  

Trichy Dindugal Madurai Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment