Advertisment

மாநில வளர்ச்சி ஊக்குவிப்பு; அரசியலுடன் பொருளாதாரத்தை கலந்த கருணாநிதி

கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவரான எஸ்.மாதவன், மாநிலம் முழுவதும் பெரிய தொழில் பூங்காக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, மாநிலமும் பங்குதாரராக இருக்கும் கூட்டுத் துறை என்ற கருத்தை முன்னோக்கி கொண்டு சென்றார்.

author-image
WebDesk
New Update
Making of a diversified Tamil Nadu How Karunanidhi blended good politics good economics for states growth

தமிழ்நாட்டில் தி.முக. ஆட்சிக்கு வந்ததும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி

1989ஆம் ஆண்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்,

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், திமுக தலைவர் கருணாநிதி, டெல்லி சென்றார். அப்போது, தேசிய தலைநகரில் உள்ள அமைச்சகங்களில் பணிபுரியும் மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அவர் சந்தித்தார்.

தொடர்ந்து, 1988 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ராஜீவ் காந்தி மற்றும் ரஷ்ய பிரதமர் லியோனார்ட் ப்ரெஷ்நேவ் இடையே முதலில் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி திட்டத்திற்கு தனது கட்சி எதிர்ப்பு தெரிவித்தது எனினும் ரூ. 10,000 கோடி திட்டம் மாநிலத்திற்கு வெளியே செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் அவர் அதிகாரியிடம் கூறினார்.

இதையடுத்து இந்தத் திட்டத்தினால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். மேலும் ஒரு சுற்றுச்சூழல் குழுவை அமைக்க மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து படிப்படியாக எதிர்ப்புகள் முடக்கப்பட்டு, திட்டம் தொடரப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் தயாரிக்கப்பட்டது.
இதற்கிடையில் 2011-ல் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது அறிவியல் ரீதியாக தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதாக கருணாநிதி கூறினார்.

1996ல் ஜெ.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற காலக்கட்டத்தில், அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டின் திட்டத்தை நிறைவேற்ற அரசு அதிகாரத்துவம் முயன்றது.
பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தை கவரும் வகையில் சென்றார், இது மற்ற வாகன உதிரிபாக நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வாகன தலைநகராக கிரேட்டர் சென்னை பகுதி வெளிப்படுவதற்கும் வழிவகுத்தது.

ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 1970 களின் முற்பகுதியில் - அவர் முதல்வராக இருந்தபோது, தொழில்துறை வளர்ச்சியின் அடிப்படையில் தமிழகத்தை மிகவும் பன்முகத்தன்மை கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

1960 களில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொழில்துறை அமைச்சராகவும் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த ஆர் வெங்கட்ராமன், அத்தகைய தொழில்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் நிதியளிக்கும் தொழில்துறை எஸ்டேட் மற்றும் நிறுவனங்களின் கருத்தை ஊக்குவித்தார்.

அவரது நம்பிக்கைக்குரிய மந்திரிகளில் ஒருவரான எஸ் மாதவன், மாநிலம் முழுவதும் பெரிய தொழில் பூங்காக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மாநிலமும் ஒரு பங்காளியாக இருக்கும் கூட்டுத் துறையின் கருத்துடன் அதை முன்னெடுத்துச் சென்றார்.

சில தசாப்தங்களுக்குப் பிறகு, இது வளர்ச்சி மையங்கள் மற்றும் மின்னணுத் துறைக்கான ஊக்குவிப்பு வடிவத்தில் இருந்தது, இது 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் போதும் சூரிய உதய கட்டத்தில் இருந்தது.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அடல் பிஹாரி வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகருமான எஸ். நாராயண், அவரது திராவிட ஆண்டுகள் – தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் நலன் என்ற புத்தகத்தில் 70களின் தசாப்தத்தில் மாநிலத்தின் வளர்ச்சி குறிகாட்டிகள் கணிசமாக அதிகரித்தன என்று கூறியுள்ளார்.

அதாவது, 1970 மற்றும் 1976 க்கு இடையில் நிலையான விலையில் மாநில உள்நாட்டு உற்பத்தி 17 சதவீதம் வளர்ந்தது, தனிநபர் வருமானம் சுமார் 30 சதவீதம் உயர்ந்தது.
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 39.5 சதவீதமாக இருந்த எழுத்தறிவு விகிதம் 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 54.4 சதவீதமாக உயர்ந்தது.

அதே சமயம் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து காணப்பட்டது. மேலும், அதிமுக ஆட்சியில் எம்ஜி ராமச்சந்திரன் ஆட்சியில் இருந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், வளர்ச்சிக்கான அடித்தளம் திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது என்று நாராயண் வாதிடுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karunanithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment