மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Advertisment
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கமல்ஹாசன், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடர்ந்தார். அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்நிலையில், தற்போது நடப்பு பிக்பாஸ் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil