scorecardresearch

நாமே விதை, நாமே விடை: கோவையில் ம.நீ.ம உறுப்பினர் சேர்க்கை முகாம்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் “நாமே விதை, நாமே விடை” என விழிப்புணர்வு செய்து புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.

makkal needhi maiyam Membership Camp in Coimbatore
கோவையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் துணை தலைவர் தங்கவேல் தலைமையில் வடமேற்கு மாவட்ட செயலாளர் தம்புராஜ் மற்றும் மண்டல ஊடக பிரிவு செயலாளர் ரம்யா வேணுகோபால் உள்ளிட்டோர் கவுண்டர்மில்ஸ் பகுதியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, “நாமே விதை, நாமே விடை” என விழிப்புணர்வு செய்து புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 1000 வீடுகளுக்கு சுற்று சூழலை பேணுவது குறித்து விழிப்புணர்வு செய்து, மரங்கள், செடி கொடிகள் வளர்க்க விதைகள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக நிர்வாகிகளுக்கு பல்வேறு பணிகளை செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற இப்போதே களப்பணி ஆற்ற ஆரம்பித்துவிட்டனர்.
அதன் ஒரு பகுதியாக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Makkal needhi maiyam membership camp in coimbatore