தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ஒன்றான மக்கள் நீதி மையத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கமலஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2018ஆம் ஆண்டு துவங்கிய இந்த மக்கள் நீதி மையம் என்ற கட்சி, 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது.
"இந்த கட்சி ஜனநாயகத்தின் வழியாகவே பாசிசத்தை எதிர்கொள்ளும் முயற்சியை செய்து வருகிறது.
மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த நாங்கள், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் எங்கள் கடமைகளை முழு மூச்சாய் எடுத்து செயல்படுவோம்.
இதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி, தங்களது சேவையை மிகப்பெரிய எழுச்சியாக நின்று செய்வோம் என்பதை உறுதிமொழியாக எடுத்துக்கொள்கிறோம்", என்று மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துக்கொண்டனர்.