scorecardresearch

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்; ஆளுநருக்கு எதிராக கோவையில் ம.நீ.ம கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கோவையில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

Kovai MNM Protest
ஆளுநரைக் கண்டித்து கோவையில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரியும் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ம.நீ.ம கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் பாதிப்பு; கோவையில் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ம.நீ.ம கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் எரிவாயும் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், ஆன் லைன் ரம்மியால் பல உயிர்கள் பறிபோவதாகவும் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ம.நீ.ம தலைவர் உத்தரவின் படி வரும் நாட்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த உள்ளதாகவும் அக்கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Makkal needhi maiyyam protest against tn governor on online rummy bill at kovai