ஸ்ரீரங்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநிவாசன் என்ற சிறுவன் காணாமல் போனதும், பின்னர் அச்சிறுவனை கொள்ளிடக்கரையில் பிணமாக மீட்கப்பட்டது திருச்சி மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் வேத பாடசாலையில் பயிலும் சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சியையும் கற்றுத் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் தெய்வங்களுக்கு நிகழ்த்தப்படும் தீர்த்தவாரி போன்ற உற்சவங்களில் குளத்திலும், ஆற்றிலும் பலர் நீச்சல் தெரியாமல் இறந்து போவது தொடர் கதையாகிறது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பாடசாலையிலேயே தங்கி வேதம் பயில்கிறார்கள். இந்த பாடசாலையில் பயிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை முறைபடுத்த, வேதபாடசாலையை கண்காணிக்க, ஆய்வு செய்ய என்ன வழிவகையை தமிழக அரசு செய்துள்ளது என்பது தெரியவில்லை.
மேலும் வேதபாடசாலை மாணவர்கள் தொடர் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதற்காக வேதபாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு வேதத்தோடு, நீச்சல் பயிற்சி போன்ற தற்காலத்திற்கு தேவையான பயிற்சிகளை மேம்படுத்த தமிழக அரசு உடனடியாக அரசாணை இயற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
/indian-express-tamil/media/post_attachments/1ab7a137-171.jpg)
அதே நேரம், கடந்தாண்டு ஸ்ரீரங்கத்திலுள்ள ஒரு வேதபாடசாலையில் விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், அபிராம் ஆகிய மூன்று மாணவர்கள் கொள்ளிடக்கரையில் ஆற்று நீரில் மூழ்கி இறந்து போனார்கள். இந்த நிகழ்வு தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் துறையினர் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்ததோடு சரி, குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யவில்லை என்பது என்ன காரணம் என்று தெரியவில்லை? மேற்கண்டவாறு திருச்சி மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்