Advertisment

பிளாஸ்டிக் பைகளில் உணவு விநியோகத்திற்கு அபராதம் என்னும் அரசாணையின் நிலை என்ன? மக்கள் சக்தி இயக்கம் கேள்வி

பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை விநியோகம் செய்தால் அபராதம் என்னும் தமிழக அரசின் ஆணையின் தற்போதைய நிலை என்ன என்று மக்கள் சக்தி இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Makkal sakthi movement

பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை பார்சல் செய்து கொடுத்தால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் தற்போதைய நிலை என்ன என்று மக்கள் சக்தி இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது

Advertisment

இது குறித்து அந்த இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் கூறுகையில், "உணவகங்களில் இருந்து உணவுப் பொருள்களை பார்சலாக வழங்கும் போது, அவற்றை பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவர்களில் கட்டிக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. 

இதனால், உணவுப் பொருள்களில் இரசாயனம் கலந்து அவற்றை சாப்பிடும் நபர்களுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை புதிய அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அதில், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் செய்ய பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாயில் கவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

Advertisment
Advertisement

மேலும், பிளாஸ்டிக் பேப்பர், சில்வர் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல்முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி, கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்பட்டிருந்தது.   

இந்த உத்தரவை 2024 நவம்பர் 18-ஆம் தேதியே தமிழக அரசு அமல்படுத்தியது. ஆனால், இதை கடைக்காரர்களும், பொதுமக்களும் நடைமுறைப்படுத்தவில்லை. 
எனவே, பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துபவர்களை உடனே எச்சரித்து, உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து உற்பத்தியை தமிழக அரசு தடுக்க வேண்டும். 

இது போன்ற பிளாஸ்டி பொருள்கள் பயன்படுத்துவதை கடைக்காரர்களும், பொதுமக்களும் தவிர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அபராதமும், தண்டனையும் விதிக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி - க. சண்முகவடிவேல்

Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment