திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் மக்களை தேடி மருத்துவ பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது.
ஐநா சபை அமைப்பு இத்திட்டத்தை பாராட்டியதாக தமிழக முதலமைச்சர் அறிவித்த நிலையில், மிக குறைவான சம்பளம் மற்றும் இன்சென்டிவ் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் இதுவும் மாதம் மாதம் வழங்காமல், உள்ளதை சரி செய்து மாதம், மாதம் வழங்கிடவும், மாநில தலைநகரான சென்னையில் மகளிர் நலமேம்பாட்டு வாரியம், ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வேலை நேரம் உட்பட அறிவித்த சலுகைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சி.ஐ.டி. யு.மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார இணைஇயக்குனர் ஆகியோரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட செயலாளர் வள்ளி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, சி.ஐ.டி.யு மாவட்ட நிர்வாகிகள் செல்வி, பிரமிளா, செல்வராஜ், மற்றும் சங்கீதா, அனுசுயா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“