ம.தி.மு.க.,வில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்; ’ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார்’ - மல்லை சத்யா

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, மல்லை சத்யாவை ம.தி.மு.க.-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, மல்லை சத்யாவை ம.தி.மு.க.-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vaiko Mallai Sathya

ம.தி.மு.க.வில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம் – வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக, "தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டார்" என வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த மல்லை சத்யா, "என்னை துரோகி என்று அழைப்பதற்குப் பதிலாக, விஷம் கொடுத்திருந்தால் அதை குடித்துவிட்டு இறந்திருப்பேன்" என்று வேதனையுடன் கூறினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, தன்னை துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக நீதிகேட்டு, மல்லை சத்யா கடந்த மாதம் சேப்பாக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக வைகோ அறிவித்தார். மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கையை கைவிட 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கலாம் என்றும் வைகோ கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், வைகோவுக்கு கடிதம் எழுதிய மல்லை சத்யா, "32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி, சக்கையாக தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நாட்டு மக்கள் நிச்சயம் உங்களுக்கு வழங்குவார்கள்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், மல்லை சத்யா மீது கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டது உறுதியானதால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி உடமைகள் மற்றும் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை, ம.தி.மு.க.வில் உட்கட்சி பிளவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 

”எதிர்பார்த்த ஒன்று”-மல்லை சத்யா

Advertisment
Advertisements

இந்த அறிவிப்பு தனது அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இதுதான் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என மல்லை சத்யா கூறி உள்ளார். ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார் என்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: