மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து, ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அனைத்து எதிர்கட்சி முதல்வர்களை ஒன்றிணைக்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ சட்டப்பேரவையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் ஸ்டாலினை அழைத்து ஆதரவு தெரிவித்தார். ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநர்களுக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அவர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்து எதிர்கட்சி முதல்வர் கூடி ஆலோசனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் நிறைவேற்றினார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.