Advertisment

கருணாநிதி மறைவு : சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி!

கருணாநிதி சரியாக 6.10 மணிக்கு காலமானதாக கூறப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாநிதி மறைவு : சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி!

திமுக தலைவர் கருணாநிதி  காலமானதால்  அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மேற்கு வங்க   முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று  இரவு  சென்னை வருகிறார்.

Advertisment

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவால் சரியாக 6. 10 மணிக்கு காலமானதாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. அவர் உடல்நலம் குறித்து விசாரிக்க பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில்  நேற்று காலை முதல் கருணாநிதியின் உடல் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. முடிந்தவரை சிகிச்சை அளித்த போதிலும் கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் செயல் இழந்துவருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்திருந்தது.

publive-image கருணாநிதி காலமானார் என அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை

இந்த செய்தி வெளியானது முதல் காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிய தொடங்கினார். “எழுந்து வா தலைவா” என்று கண்ணீருடன்  வாசகங்களை எழுப்பி வந்தனர்.  இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானதாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரியாக 6.40 மணிக்கு வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில் உடல் நலக்குறைவால் கருணாநிதி சரியாக 6.10 மணிக்கு காலமானதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் இறுதி அஞ்சலில் பங்கேற்க  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று இரவு 9 மணிக்கு சென்னை வருகிறார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment