Advertisment

போலீஸ் துணை கமிஷனர் மீது ஷாக் புகார்: திருச்சி கலெக்டர் அலுவலக வாசலில் நூதன போராட்டம் நடத்திய நபர்

திருச்சி மாநகர துணை காவல் ஆணையர் மீது தொழிலதிபர் நில அபகரிப்பு புகார், கார் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy

Trichy

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலதிபர், தமிழ்நாடு விடியல் இரத்த சர்வீஸ் அமைப்பின் தலைவர் வேலன் என்பவர் தனது கார் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தினார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என்று வேலவன் தெரிவித்தார்.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி கென்னடி தலைமையிலானா போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறி வேலவனை கைது செய்து திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது வேலவன் தனக்கு இதய நோய் இருப்பதாகவும், இரத்த அழுத்தம் இருப்பதாகவும் கூறிய நிலையில் போலீசார் அவரை உடனே திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் வேலன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையைச் சேர்ந்த துரைபாபு, அவரது மகன்களுக்கு சொந்தமான ஓசூரில் உள்ள 4,800 சதுர அடியில் உள்ள நிலத்தை வாங்குவதற்காக ரூ.40 லட்சம் பணத்தை ரொக்கமாக கொடுத்தேன். பணத்தைக் பெற்றுக் கொண்ட துரைபாபு அவரது மகன்களும் எனக்கு பத்திரத்தை பதிவு செய்து தராமல் இழுத்தடித்தனர்.

இது தொடர்பாக 2021-ம் ஆண்டு கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு கொடுத்தேன். அப்போது ஏ.டி.எஸ்.பி ஆக இருந்த தற்போது திருச்சியில் டி.சியாக இருக்கும் அன்பு என்பவர் எனது புகார் மனு குறித்து விசாரித்தார்.
விசாரணையின் இடையிலேயே, நான் யார் மீது புகார் கொடுத்தேனோ அவர்களிடம் இணைந்து கொண்டு அவர்களுக்கு சாதமாக செயல்பட்டார். எனது எதிர் மனுதாரர் ஆன நில உரிமையாளர்களிடம் நீ ஏதோ பேசி அவர்கள் எனக்கு எழுதி தர இருந்த இடத்தை தனது பெயருக்கு திருச்சி டி.சி அன்பு மாற்றி எழுதி அதிகார பலத்தால் தனது பெயரில் பத்திரம் பதிவு செய்து கொண்டார்.

நில உரிமையாளர்களும், நானும் எழுதி வைத்திருந்த ஒப்பந்த பத்திரத்தை விசாரணையின் போது அன்பிடம் காண்பித்தேன். அதையும் வாங்கி எதிர் மனுதாரர்கள் வசம் அப்போதைய ஏடிஎஸ்பி அன்பு கொடுத்துவிட்டு என்னை அங்கிருந்து விரட்டி விட்டார்.
நான் 40 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்து நிலையில் மேலும் காவல்துறையினர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில் நான் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மீண்டும் புகார் செய்தேன்.

அதிகார பலத்தால் தன்னை காத்துக் கொண்ட கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி அன்பு என்னை மீண்டும் மிரட்டினார். நான் முதல்வர் தனிப்பிரிவு என பல கட்டமாக அலைந்த பிறகும் எந்த பிரயோஜனமும் எந்த நீதியும் எனக்கு கிடைக்கவில்லை.
தற்போது திருச்சி டி.சியாக இருக்கும் அன்பு மீது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். இங்கும் என்னை அவரது அதிகார பலத்தால் போலீசாரை வைத்து என்னை அங்கிருந்த அகற்றி விட்டார் என்றார்.

இது குறித்து கேட்க திருச்சி மாநகர துணை காவல் ஆணையர் அன்புவிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அழைப்பு தவிர்க்கப்பட்டது. திருச்சி துணை காவல் ஆணையர் மீது தொழிலதிபர் நில அபகரிப்பு புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment