கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், செவ்வாய்க்கிழமை உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தாடகம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி இவருடைய மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், அதே பகுதியில் சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த வாலிபரை அவரது தந்தை வேலுச்சாமி எச்சரித்து அனுப்பி உள்ளார். மேலும், இது குறித்து காவல்நிலையத்தில் புகாரும் அளித்து உள்ளார்.
இந்த நிலையில், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்கு வந்த வேலுச்சாமி பெட்ரோல் ஊற்றி தீகுளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் ஒருவர் திடீரென புகுந்து தற்கொலை செய்ய தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“