கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் மரணம்

கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு; ஏ.டி.ஜி.பி தாமரை கண்ணன் நேரில் ஆய்வு

கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு; ஏ.டி.ஜி.பி தாமரை கண்ணன் நேரில் ஆய்வு

author-image
WebDesk
New Update
NIA arrests 3 persons in connection with Coimbatore Car Bomb Blast case

கோவை கார் வெடிப்பு தாக்குதலில் ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

publive-image

இதையும் படியுங்கள்: வால்பாறை அருகே ரேஷன் கடையை உடைத்த காட்டு யானைகள்: அரிசி மூடைகள் தப்பின

publive-image

தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

publive-image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். நடமாடும் தடய அறிவியல் துறை ஆய்வக வாகனம் வந்து, தடயங்களை சேகரித்து வருகிறது. கார் வெடித்து விபத்துக்குள்ளான இடத்தில் ஏ.டி.ஜி.பி தாமரை கண்ணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: