Advertisment

போலீஸ் காவலில் விசாரணைக் கைதி மரணம்.. சித்திரவதை செய்ததால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

சென்னையில் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து சுமார் 10 நாட்களுக்குப் பிறகு, மலை குறவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், லஞ்சம் கொடுக்கத் தவறியதற்காக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
tiruvannamalai

Man dies in judicial custody in tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சுவதாக குற்றம் சாட்டப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட பழங்குடியினரான கே தங்கமணி (55), மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதனிடையே போலீஸ் காவலில் சித்திரவதை செய்ததால் தான் தங்கமணி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, அவரது குடும்பத்தினர் தங்கமணியின் உடலைப் பெற மறுத்து, , சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கிராம மக்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே சமீபத்தில் சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். கடந்த 10 நாட்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

சிறைக்கு மாற்றப்பட்ட தங்கமணி அங்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து’ தங்கமணியின் இளைய மகனும், தனியார் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரியும், பொறியியல் பட்டதாரியான தினகரன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது, ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் தனது தந்தையை போலீசார் அழைத்துச் சென்றனர். "நாங்கள் காரணம் கேட்டபோது, ​​விசாரணைக்குப் பிறகு, அவர் மாலைக்குள் (ஏப்ரல் 26 அன்று) வீடு திரும்புவார் என்று போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்.

பிறகு தன் தந்தை மீதான வழக்கை முடித்து வைக்க போலீசார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று நாங்கள்  அவர்களிடம் கெஞ்சினோம். இந்நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி மதியம், தங்கமணி இறந்துவிட்டதாக கவுன்சிலர் மூலம் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.

எனது தந்தை ஒரு விவசாயி. அவர் ஆரோக்கியமான உடல் நிலை கொண்டவர். அவருக்கு வலிப்பு நோய் வந்ததில்லை. ஆனால் வலிப்பு நோயால் அவர் இறந்ததாக போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்," என்று அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த வேலூர் ரேஞ்ச் டிஐஜி டாக்டர் இசட் அன்னி விஜயா, “கடந்த 2009 முதல் தங்கமணி மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பலமுறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சில வழக்குகளில் தண்டனையும் பெற்றுள்ளார். சோதனையின் போது அவர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஒரே நாளில் இரண்டு முறை உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, பிறகு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்," என்று அவர் கூறினார்.

உரிய விசாரணை நடத்தப்படும் என்றார் ஸ்டாலின்

நீதிமன்ற காவலில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் தட்டரனையைச் சேர்ந்த தங்கமணியின் மரணம் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துப் பேசினார்.

கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன்வைத்து, இபிஎஸ், செய்தியாளர்களிடம் கூறுகையில்: தங்கமணி லஞ்சம் கொடுக்க மறுத்ததால், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் உள்ள போலீஸார் ஏப்ரல் 26ஆம் தேதி அவரை அழைத்துச் சென்றதாக தங்கமணியின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாக கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment