சென்னையில் தனது செல்போனை சார்ஜில் போட்டபடி பேசிக்கொண்டிருந்த வாலிபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காமராஜ் (வயது 22), தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவர் வண்ணாரப்பேட்டை மூலக்குளம் பகுதியில் டீ கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் தனது செல்போனை சார்ஜ் போட்டபடி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காமராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர் மயங்கிக் கிடந்ததைக் கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை காவல்துறை, உயிரிழந்த காமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil