scorecardresearch

அதிர்ச்சி.. ‘சார்ஜிங்’ போனை ஈரக்கையால் எடுத்து பேசிய நபர்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

குளித்த கையோடு சார்ஜ் போடப்பட்டிருந்த போனை ஈரக்கையால் எடுத்து பேசிய போது, வயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி மத்திய அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி.. ‘சார்ஜிங்’ போனை ஈரக்கையால் எடுத்து பேசிய நபர்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் பால் பாண்டி என்பவர் பணியாற்றி வந்தவர். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று குளித்து விட்டு வந்த அவர், சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை ஈரக்கையால் எடுத்து பேசியுள்ளார்.

அப்போது சார்ஜர் வயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பால் பாண்டி உயிரிழந்தார். இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Man electocuted while charging mobile phone

Best of Express