மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை (STF) நேற்று சென்னையைச் சேர்ந்த அன்வர் ஷேக் என்ற நபரை கைது செய்தனர். அன்வர் ஷேக் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஷஹாதத்-இ அல் ஹிக்மாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறி கைது செய்தனர்.
அன்வர் ஷேக் சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கைது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் அவரை மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து செல்ல உள்ளோம். இன்று, நாங்கள் அவரை சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் வைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
இந்த அமைப்பு தொடர்பாக ஒரு கணினி அறிவியல் மாணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஷேக்கின் பெயர் வெளிவந்தது. கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்து வந்தது தெரியவந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“