அண்மையில் யூடியூப் சேனல் ஒன்று, சென்னை மாநகராட்சி தேர்தலில் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா ஆனந்தன் குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டது.
Advertisment
அப்போது ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்பவர், ‘நான் ஒரு இந்து தீவிரவாதி’ என்பதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டு தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தான் அவர் உண்மையான இந்து" என்றார்.
இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisment
Advertisement
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல் துறையினர், இந்து தீவிரவாதி ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியனை கைது செய்தனர்.
அவர் மீது கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுவதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் ஈஸ்வர் கூறுகையில், சம்பந்தப்பட்ட யூடியூப் செனல் எடிட் செய்யப்பட்ட வெர்ஷனை தான் அப்லோடு செய்வோம் என கூறியதன் காரணமாகவே, அப்படி பேசியதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil