சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் பிரபல யூடியூபர் A2D நந்தகுமார் வீடியோ எடுத்துக் கொண்டு நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரையும், அவரது நண்பரையும் மிரட்டும் வகையில் பேசியும், அநாகரிகமாக பேசியும், அத்துமீறி கேமராவை பறித்து அட்டூழியம் செய்துள்ளனர்.
நந்தகுமார் A2D என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட் பகுதிக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னையின் பரபரப்பான தெருவில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், அந்த வீடியோவில் உள்ள 3 நபர்கள் ஆட்டோவில் வைத்து மது அருந்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரானதை தொடர்ந்து சிந்தாதிரிப் பேட்டை போலீசார் யூடியூபருக்கு மிரட்டல் விடுத்த பெரம்பூரைச் சேர்ந்த கானா ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகிய 3 பேர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“