சிவகங்கை மாவட்டம் திருப்பாசத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மனைவி பிரிந்து வாழ்வதற்கு மாமியாவும் அவருடைய அம்மா தான் காரணம் என்று கருதிய பசுபதி மனைவியின் அம்மாவான பாண்டிச் செல்வி வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது பாண்டிச்செல்வியும் (50) அவருடைய அம்மாவான சொர்ண முத்தையையும் சரமாரியா வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விபரம் அறிந்த காவல்துறையினர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பாசேத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: சக்தி சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“