மனைவியுடன் சண்டையில் தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட கணவன்; எதிர்பாரா விதமாக தீப்பிடித்ததில் 5 பேர் மரணம்

தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்; கணவனைத் தீக்குளிக்க விடாமல் மனைவி தடுக்க முயன்ற நிலையில், எரியும் அடுப்பில் பெட்ரோல் விழுந்து, வீடு தீப்பிடித்து எரிந்து குழந்தைகள் உட்பட 5 பேர் மரணம்

Tamil news
Tamil news Updates

கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமையன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக அவர்களின் வீட்டிற்குள் தீப்பிடித்ததில் 3 பேர் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் மரணமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செல்லங்குப்பம் அருகே நடந்த இந்த சம்பவத்தில், இறந்தவர்கள் சத்குரு, அவரது மனைவி தனலட்சுமி, அவர்களின் ஒன்பது மாத மகன், சத்குருவின் மைத்துனி தமிழரசி மற்றும் அவரது நான்கு மாத மகள் என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தனலட்சுமியின் தாய் செல்விக்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: திருச்சி மேம்பாலத்தின் கீழ் தங்கி இருக்கும் வட மாநிலத்தினர் விவரம் சேகரிப்பு: கமிஷனர் சத்யபிரியா

காவல்துறையின் கூற்றுப்படி, சிதம்பரத்தை சேர்ந்த சத்குரு என்பவர் தனலட்சுமியின் விருப்பத்திற்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். புதன்கிழமை தனலட்சுமி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த சத்குரு, செல்வியுடன் தனலட்சுமி இருப்பதை அறிந்ததும், செல்லங்குப்பத்தில் உள்ள தமிழரசியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

“அவர் (சத்குரு) பைக்கில் பெட்ரோல் கேன் வைத்திருந்தார். வாக்குவாதத்தில் பைக்கில் இருந்த கேனை எடுத்து வீட்டுக்குள் வந்து தன் மீது ஊற்றினார். அப்போது, ​​குழந்தைகளுக்காக விறகு அடுப்பில் குடும்பத்தினர் தண்ணீர் வைத்திருந்தனர். தனலட்சுமி, தனது ஒன்பது மாதக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, சத்குரு தன்மீது அதிக பெட்ரோலை ஊற்றிக் கொள்வதைத் தடுக்க முயன்றார், ஆனால் பெட்ரோல் விறகுகளில் விழுந்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது” என்று கடலூர் பழைய நகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் indianexpress.com தெரிவித்தார்.

மேலும், “ஐந்து பேர் இறந்தனர். 70 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான தனலட்சுமியின் தாயாரும் கவலைக்கிடமாக உள்ளார்” என்றும் இன்ஸ்பெக்டர் உதயகுமார் கூறினார்.

சத்குரு கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அங்கு செவிலியரான தனலட்சுமியை சந்தித்தார். அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களது உறவுக்கு அவர்களது குடும்பத்தினர் சம்மதித்து 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும், தனலட்சுமி கர்ப்பமான பிறகு, சத்குருவின் குடிப்பழக்கத்தால் தம்பதியருக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு, தனலட்சுமி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 (ii) (குற்றமிழக்க அல்லது கவனக்குறைவான செயலைச் செய்வதன் மூலம் யாரேனும் ஒரு நபரின் மரணத்திற்கு காரணமானவர்) இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Man pours petrol on himself accidentally

Exit mobile version