ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கீழ்ப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மழையில் நனைந்ததால் இளைஞர் ஒருவர் சுயநினைவிழந்து கிடந்ததால் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில், அந்த நபர் உயிருடன் இருப்பதை கண்டறிந்த டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அந்த இளைஞரை தனது தோளில் தூக்கிக்கொண்டு ஓடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அவருக்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியதாகவும், அப்போது தொடர்ந்து மழையில் நனைந்ததால் உடல் நிலை மோசமடைந்து மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கடையில், முதலமை்சசர் மு.க ஸ்டாலின் டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man saved by chennai police inscpector dies at hospital

Next Story
‘துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவதா?’ கொலிஜியத்திற்கு வழக்கறிஞர்கள் கடிதம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com