முதல்வர் வீட்டருகே தீக்குளித்த நபரால் பரபரப்பு… மருத்துவமனைக்கு விரைந்த மா.சு

அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், தீக்குளித்த நபர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டருகே வந்த ஒருவர், திடீரென கையில் வைத்திருந்த  மண்ணெண்ணெய் மேலே ஊற்றித்  தீக்குளிப்பில் ஈடுபட்டார்.


இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர், தீக்குளித்த நபர் மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினர். தீக்காயம் அடைந்த நபரை, உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை நடத்திய விசாரணையில், தீக்குளித்த நபர் தென்காசி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் , அவரை சிலர் வாபஸ் வாங்கச் சொல்லி  மிரட்டுவதாகவும் கூற முதல்வர் இல்லம் முன்பு தீக்குளிப்பில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், இந்தத் தகவலை அறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உடனடியாக  மருத்துவமனைக்கு நேரில் சென்று, தீக்குளித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man set to fire infront of cm house

Next Story
கோவை, பெண் அதிகாரி பாலியல் வழக்கு; சக விமானப்படை அதிகாரி கைதுpalani rape case
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com