scorecardresearch

கனிமொழி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்.. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சிப்காட் காவல் நிலையத்தில் கனிமொழி எம்பி அலுவலக தரப்பினர் அளித்த புகாரையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Man who tresspass entered Kanimozhis house in Tuticorin
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்.பி. வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பி., கனிமொழி, தூத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.

இந்த வீட்டில்தான் இவர் 20க்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து மக்கள் பணிகளை செய்துவருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு கனிமொழி வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் புகுந்துவிட்டார்.
இது தொடர்பாக கனிமொழி அலுவலக ஊழியர்கள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கனிமொழி எம்.பி. வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Man who tresspass entered kanimozhis house in tuticorin