அமெரிக்காவில் இருந்தபடியே திருவாரூரில் மனைவியை கொல்ல கூலிப்படையை அனுப்பிய கணவர்

இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபிரகாஷை இந்தியா அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எஸ்.பி கயல்விழி கூறியுள்ளார்.

Man working in the US hires henchmen to kill his wife

Man working in the US hires henchmen to kill his wife : திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிடாரங்கொண்டான் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயபாரதி. அவருக்கு வயது 28. அவருடைய கணவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். மே 21ம் தேஎதி அன்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த அவர் மீது டாட்டா ஏஸ் வாகனம், கடவையாறு பாலத்தின் அருகே மோதி விபத்துக்குள்ளானது. ஜெயபாரதி ரத்த வெள்ளத்தில் உதவியின்றி தவிக்க டாட்டா ஏஸ் வாகனம் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. சிறிது நேரத்தில் அங்கே வந்த மக்கள் ஜெயபாரதியை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயபாரதி இறந்துவிட்டார்.

இந்த விபத்தில் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர்கள், விபத்து நடந்த இடத்திற்உ சென்றனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களிடம் பேசிவிட்டு விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவாரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஐ.பி.சி. 279, 337 கீ ழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது 2015ல் விஷ்ணுபிரகாஷ் என்பவரை மணந்து கொண்டார் என்றும், அவரும் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார் என்றும் தெரிய வந்தது. தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஜெயபாரதி அமெரிக்காவில் இருந்து வந்து அந்தக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிகமாக பணியாற்றினார். இரு குடும்பத்தினரும் எவ்வளவோ முயற்சி செய்தும் தம்பதியினர் மீண்டும் ஒன்றாக சேர விரும்பவில்லை. இந்நிலையில் ஜெயபாரதி விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் விஷ்ணுபிரகாஷ் ஜெயபாரதியையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தியதாகவும், அவர் ஜீவனாம்சம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் என்று அஞ்சியதாகவும் என்று காவல்துறை தெரிவித்துள்ளார்.

புகாரை அடுத்த விசாரணையை துவங்கிய எஸ்.பி. கயல்விழி, ஜெயபாரதியின் வீட்டில் இருந்து விபத்து நடந்த இடம் வரை கிடைத்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த டாட்டா ஏஸ் ஜெயபாரதியை சில நாட்களாக்க பின் தொடர்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

விஷ்ணுபிரகாஷின் மைத்துனர் செந்தில்குமாருக்கு சொந்தமான டாட்டா ஏஸ் வண்டி ஜெயபாரதியின் விபத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. செந்தில்குமார், ஜெகன், பிரசன்னா, ராஜா ஆகியோரை காவல்துறையினர் இது தொடர்பாக கைது செய்து விசாரணை நடத்திய போது மைத்துனர் விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் இருந்து ஜெயபாரதியை கொலை செய்ய கூறியது அம்பலமானது. இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபிரகாஷை இந்தியா அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எஸ்.பி கயல்விழி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man working in the us hires henchmen to kill his wife in tiruvarur

Next Story
Tamil News Today: “பெண் குழந்தைகளின்பாதுகாப்பை உறுதி செய்வோம்” – கமல்ஹாசன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com