/tamil-ie/media/media_files/uploads/2022/09/powercut-1-8.jpg)
Manali substation Fire accident Chennai power disrupts
சென்னைமணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளும் இருளில் மூழ்கின. முக்கிய சாலைகளில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில் நிலையங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மின் தடைக்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் X பக்கத்தில் பகிர்ந்துள்ள விளக்கத்தில், ‘நேற்றிரவு மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. ஆனால், தீ விபத்தில் இரண்டு ஃபீடர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னைக்கு மின் விநியோகம் தடைபட்டது.
"⚡️ Swift Action by TANGEDCO ⚡️
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) September 13, 2024
Within a few hours, the dedicated team at TANGEDCO worked tirelessly to resolve the fault at NCTPS II, ensuring the Manali SS feeding the city was restored to its original healthy condition by 0600 hrs this morning. pic.twitter.com/j26PFjZoEZ
இருப்பினும் மின்சார வாரியம் துரிதமாக செயல்பட்டு மாற்றுப் பாதைகளில் மின் விநியோகம் செய்து படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் மீண்டும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தது. வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்பாக தன்னை நிலைநாட்டியுள்ளது. மின் தடை காரணமாக சென்னையில் அத்தியாவசியத் தேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. தற்போது மின் சேவை 100 சதவீதம் சீர் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.