சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி சென்று வரும் பொழுது 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுமார் 7 நபர்களை கைது செய்தனர். மகளிர் காவல் நிலையத்தில் வைத்து இரண்டு நாட்களாக ரகசியமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிராமம் ஒன்றில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் நல வாரியம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
அப்பொழுது யாரேனும் உங்களிடம் தவறுதலாக நடந்துள்ளார்களா என்று கேட்கும் போது நான்கு மாணவிகள் எங்களிடம் பள்ளி சென்று வரும் பொழுது எங்களைத் தவறுதலாக தொட்டார்கள் முத்தம் கொடுத்தார்கள் பல்வேறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சரமாரியாக குழந்தைகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர்கள் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை காவல்துறையினர் அதில் சமந்தப்பட்ட சுமார் 7 நபர்களை தற்போது வரை கைது செய்து மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இதில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் முழு விசாரணைக்கு பிறகு தெரிய வரும் மேலும் 7 பேரில் ஒருவரை அந்த கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சரமாரியாக தாக்கி தற்பொழுது சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.