மணப்பாறை அருகே உள்ள சில பகுதிகள், புத்தாநத்தம், துவரங்குறிச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நண்பகல் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அப்போது வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், பொருட்கள் அதிர்ந்து ஆடியதாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சில பகுதிகள், புத்தாநத்தம், துவரங்குறிச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நண்பகல் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அப்போது வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், பொருட்கள் அதிர்வால் ஆடியதாக அப்பகுதி மக்கள் கூறினர். இது ஒரிரு வினாடிகள் மட்டுமே நீடித்த நிலையில், மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பீதி அடைந்தனர்.
அனியாப்பூர், இரட்டை கரடு என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில், பாறைகளை தகர்க்க, வழக்கத்துக்கு மாறாக அதிக அளவு வெடிபொருட்களை பயன்படுத்தி, வெடிச்சத்தமும், நில அதிர்வும் ஏற்பட்டிருக்கும் என்றும் பேசப்பட்டது.
இதுகுறித்து மணப்பாறை வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பலமான இடி காரணமாக தான் வெடிச்சத்தமும், அதிர்வும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்