Mandous Cyclone News: வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
மாண்டஸ் புயல் சென்னையில் 85 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது. இது இன்று மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயலின் வருகை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் உள்ள கடற்கரைகளில் கடும் சீற்றத்துடன் கடல் அலைகள் காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைப் படி, மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றன.
இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடப்பதால், மாமல்லபுரத்தில் பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் தங்களின் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil