மாண்டஸ் புயல் தாக்கம்: புதுச்சேரியில் வீடுகளை சாய்த்த கடல் சீற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக கடல் நீர் வீட்டிற்குள் புகுவதால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் ஈடுபட்டுள்ளனர்.
Puducherry Pillaichavady village fishermen houses damaged due to mandus cyclone Tamil News
mandus cyclone; Puducherry Pillaichavady Tamil News: புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் தற்போது மாண்டஸ் புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையில் அடித்துச் சென்று கடலில் மூழ்கி வருகிறது மேலும் ஊருக்கு வடக்கு புறத்தில் மீனவர்களின் படகுகள் வலைகளை பாதுகாக்க மீன்பிடி கலன் 2019 இல் இரண்டு கோடி மதிப்பில் கட்டி கொடுக்கப்பட்ட கட்டிடம் கடல் அலையில் பெயர்ந்து செல்லும் அபாயம் உருவாகி உள்ளது.
தற்போது கடல் அரிப்பில் வீடுகளை இழந்த குப்பன் த/பெ பெருமாள், குமார் த/பெ வீரப்பன், சக்கரபாணி த/பெ இடும்பன், சதீஷ் த/பெ ராமலிங்கம், ரமேஷ் த/பெ ராமலிங்கம், தேனப்பன் த/பெ வீரப்பன், மணிகண்டன் த/பெ வீரப்பன், செல்வமணி த/பெ வீரப்பன், ஆகியோர்களின் வீடுகள் கடலில் அடித்துச் சென்றுள்ளது.
Advertisment
Advertisements
கடல் நீர் உட்புகுவதால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் ஈடுபட்டனர்.
அரசு பேருந்துகள் இரவில் இயங்காது
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.