Advertisment

மணிப்பூர் கொடூரத்தின் வீடியோ எதிரொலி; மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு திடீர் அதிகரிப்பு

மணிப்பூர் கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூட இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் மெரினாவில் தீடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai

Chennai Power cut Today

மணிப்பூரில் வன்முறையாளர்கள் 2 பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடந்து வருவதால், சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூட இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் தீடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் மேய்தே மற்றும் குக்கி பழங்குடி இன மக்களுக்கு இடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற வண்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

கடந்த மே மாதம் மணிப்பூரில் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 2 பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ வியாழக்கிழமை வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரில் வன்முறைக் கும்பலால் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி, நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதனால், சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடலாம் என்று உளவுத் துறை எச்சரித்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூட இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் தலைமையில் 4 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வியாழக்கிழமை மாலை செல்போன் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 36 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Marina Beach Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment